பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ….. அடி மேல் அடி வாங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்…

பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ….. அடி மேல் அடி வாங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்…

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல் தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கடந்த மார்ச் மாதத்தில் பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ….. அடி மேல் அடி வாங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்…

சரி இனி யாரும் பா.ஜ.க. பக்கம் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரசுக்கு நேற்று பெரிய அடி விழுந்தது. படா மலஹாரா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த கட்சி மீளுவதற்குள் அடுத்த அடி விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேவி காஸ்டேகர் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ….. அடி மேல் அடி வாங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்…

மத்திய பிரதேசம் மாநிலம் நிபாநகர்-எஸ்.டி. சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் தேவி காஸ்டேகர். அவர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்வர் சர்மா ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் துணை தலைவர் பூபேந்திர குப்தா கூறுகையில், பா.ஜ.க.வின் பண அரசியலின் வெளிப்பாடுதான் இது என குற்றச்சாட்டினார். இதற்கு மத்திய பிரதேச பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் அகர்வால் பதில் அளிக்கையில், காங்கிரஸ் மூழ்கும் கப்பல் அதனால் மக்கள் அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என தெரிவித்தார்.