முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி… பா.ஜ.க. முதல்வர் பதிலடி

 

முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி… பா.ஜ.க. முதல்வர் பதிலடி

முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் நெறிமுறையை பின்பற்றுகிறோம் என்று அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன் என ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தில் மட்டும் 150 மையங்களில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. இதனால் தடுப்பூசி பாதுகாப்பானது என்றால் முதல்வர் ஏன் அதனை போட்டுக்கொள்ளவில்லை என்று சில எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி… பா.ஜ.க. முதல்வர் பதிலடி
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் நெறிமுறையை பின்பற்றுகிறோம் என்று அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிக்கு ஒரு செயல்முறை உள்ளது, முதல்வரே அதனை பின்பற்றவில்லை என்றால் அந்த பிரச்சாரம் எப்படி வெற்றிகரமாக இருக்கும். முதலில் நமத கொரோனா வாரியர்ஸ் போட்டு கொள்வார்கள் அதன் பிறகு நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன். எதிர்க்கட்சி நண்பர்கள் ஒற்றுமை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் என்று தெரிவித்தார்.

முதல்வர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சில முட்டாள்கள் கேள்வி… பா.ஜ.க. முதல்வர் பதிலடி
தடுப்பூசி போடுதல்

மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில், அரசு மருத்துவமனைகளுடன் தனியார் மருத்துவமனைகளும் கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் போடப்படுகிறது என்ற தகவலை பொதுமக்களிடம் அனைத்து மத தலைவர்கள், மாவட்ட நிர்வாகங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த பொது நலன் பணிகள் தொடர்பாக எந்தவொரு எதிர்மறையான செய்தியும் வெளியே வரக்கூடாது. சுகாதாரத்துறையும் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.