கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம்.. ம.பி. அரசு அறிவிப்பு

கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம்.. ம.பி. அரசு அறிவிப்பு

கொரோனாவால் தாய், தந்தையை இழந்த அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை நம் நாட்டில் மிகவும் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் சுமார் 4 ஆயிரம் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். கொரோனாவுக்கு பெற்றோர்களை பறிகொடுத்து பல குழந்தைகள் அனாதைகளாக நிற்கின்றனர்.

கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம்.. ம.பி. அரசு அறிவிப்பு
கல்வி

இது போன்ற குழந்தைகளின் துயர் துடைக்க மத்திய பிரதேச அரசு முன்வந்துள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: நாம் அத்தகைய குடும்பங்களை விட்டு விட முடியாது. நாங்கள் மாநில அரசு. நாங்கள் இந்த குழந்தைகளை ஆதரிப்போம். அவர்கள் அரசாங்கததின் குழந்தைகள் என்பதால் இது போன்ற குழந்தைகள் போன்ற கவலைப்பட வேண்டியதில்லை.

கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம்.. ம.பி. அரசு அறிவிப்பு
பெண்கள்

அரசாங்கம் அவர்களை கவனித்து கொள்ளும். கோவிட் தொற்று நோயால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவோம். மேலும் இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும், இந்த குடும்பங்களுக்கு இலவ ரேஷன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அரசு உத்தரவாதத்தின் பேரில் பணியாற்ற அல்லது தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு அரசு மானிய கடன் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.