வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என மக்களிடம் காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்த சவுகான்

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என மக்களிடம் காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்த சவுகான்

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என்று காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கிண்டல் அடித்தார்.

மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து இம்மாதம் 29ம் தேதியன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய பிரதேசத்தில் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கதொடங்கி விட்டது.

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என மக்களிடம் காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்த சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில், வாக்களிக்கும்போது மக்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கும்படி கூறி காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார். சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில், என் அன்பான் நண்பர்களே, மத்திய பிரதேசம், பீகார் மற்றும் கர்நாடகா உள்பட நாடு முழுவதுமாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என மக்களிடம் காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்த சவுகான்
தேர்தல்

கொரோனா வைரஸ் காலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை நாம் முழுமையாக கவனிக்க வேண்டும். கை முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என பதிவு செய்து இருந்தார். காங்கிரசின் சின்னம் கை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதைதான் சிவ்வராஜ் சிங் சவுகான் மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.