ம.பி அமைச்சரவை விரிவாக்கம்… மோடியுடன் சிவ்ராஜ்சிங் சௌகான் இன்று ஆலோசனை!

மத்தியப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் சிவ்ராஜ்சிங் சௌகான் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 120 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌகானால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடியவில்லை. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் டெல்லிக்கு சென்று பா.ஜ.க தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருடன் புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க முடியாமல் சிவ்ராஜ்சிங் சௌகான் தவித்துவந்தார்.
ஒரு வழியாக நேற்று இரவு சிவ்ராஜ்சிங் சௌகான் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் அமைச்சரவை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்தியப் பிரதேச ஆட்சி மாற்றத்துக்காகவே ஊரடங்கு தள்ளிப்போடப்பட்டதாகக் குற்றச்சாட்டும் உண்டு. இதனால் அமைச்சராகலாம் என்று கனவிலிருந்த பல எம்.எல்.ஏ-க்களும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முழு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடியாத அளவுக்கு கட்சிக்குள் அழுத்தம் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்கள் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்களின் அழுத்தமும் உள்ளது. இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை பெற சிவ்ராஜ்சிங் சௌகான் டெல்லி சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...