அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி காலமானார்!

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி காலமானார்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் ஆவார். இவருக்குக் கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு வாரமாக தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி காலமானார்!

ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டார். இச்சூழலில் மதுசூதனனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மதுசூதனனும் தற்போது மருத்துவமனையில் தான் இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார். வாக்களித்துவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் சென்றார்.