மதுசூதனன் உடல்நிலை : ‘வதந்திகளை நம்பவேண்டாம்’ என அதிமுக தகவல்!

 

மதுசூதனன் உடல்நிலை : ‘வதந்திகளை நம்பவேண்டாம்’ என அதிமுக தகவல்!

ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தா. ர் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுசூதனன் உடல்நிலை : ‘வதந்திகளை நம்பவேண்டாம்’ என அதிமுக தகவல்!

மதுசூதனனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார். அவரின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளது மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மதுசூதனன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக அதிமுக தரப்பிலிருந்து அளித்துள்ள விளக்கத்தில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.