kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா வெளியேற்றப்பட்டார்

மதுமிதா- கமல்ஹாசன்
மதுமிதா- கமல்ஹாசன்
Loading...

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா வந்த பிறகு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வனிதாவுடன் சேர்ந்து கொண்டு மதுமிதா செய்யும் வேலைகள் ஹோஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் உள்ளது. அபிராமிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று ஆண்கள் அணிக்கு எதிராக பேசிய மதுமிதா இந்த வாரம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமை பொறுப்பைச் சேரன் தவிர வேறு யாரும் விரும்பாததால் ஆண்கள் அணிகளுடன் பெண்கள் சேர்ந்து கொண்டனர். 

அதை தாங்க முடியாத மது நேற்று கேமரா முன்பு நின்று, 'நான் யாருக்காகப் பேசினேன் என்றே தெரியவில்லை. என்னை முட்டாள் ஆகிவிட்டார்கள் போல தெரிகிறது. பின்னாடி பேசிவிட்டு மீண்டும் அவர்களிடமே சென்று நன்றாக பேசுகிரகர்கள்' என்று புலம்பிய அவர் விரக்தியால் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது. 

இந்த நிலையில் அது உண்மை என்று சொல்வது போல் ஒரு புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெளியே வந்த மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை வந்து சந்திக்கிறார். அப்போது கமல், 'தட்டில் கொடுத்த வெற்றியைத் தட்டிவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய தியாகம் அகிம்சையில் இருந்திருந்தால்  நன்றாக இருந்திருக்கும்' என்றார். அதற்கு சேரன், 'மதுமிதா செய்தது முற்றிலும் தவறான விஷயம்' என்று கூறுவது போல் முடிந்துள்ளது. மதுமிதாவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.