பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை!

 

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை!

பொதுவெளியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. A Bas La Macronie (மக்ரோனிசம் வீழும்) என்று கத்திக்கொண்டே அறைந்திருக்கிறார். உடனடியாக அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்நபரையும் அவருடன் வந்து வீடியோ எடுத்த இன்னொரு இளைஞரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்தனர்.

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை!

அவர்கள் இருவரும் அரசுக்கெதிரான Yellow vest போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அந்த நபரின் பெயர் டேமியன் என்றும், தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக மக்ரோனை அறைந்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிபரைக் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக 18 மாதம் சிறைத் தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து தண்டனைக் காலம் 4 மாதமாகக் குறைத்து உத்தரவிடப்பட்டது.