பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா.. மூடப்பட்ட மாட்டுத்தாவணி பழச்சந்தை!

 

பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா.. மூடப்பட்ட மாட்டுத்தாவணி பழச்சந்தை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெரிய மார்கெட்டுகள் வெவ்வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. அந்த வகையில் மதுரை மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், அம்மா திடல் மற்றும் மாட்டுத்தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அம்மா திடல் காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 150 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மாட்டுத்தாவணி பழச்சந்தையில் 242 கடைகள் இயங்கி வருகின்றன.

பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா.. மூடப்பட்ட மாட்டுத்தாவணி பழச்சந்தை!

இந்த நிலையில் மாட்டுத்தாவணி பழச்சந்தையில் கடை வைத்திருக்கும் 55 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் கொரோனா பரவாமல் இருக்க பழ மார்க்கெட்டை மூட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, 10 நாட்களுக்கு தற்காலிகமாக கடைகளை அடைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். மாட்டுத்தாவணி சந்தையிலிருந்து சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த 10 நாட்களுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மூலமாகத் தான், சென்னையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.