இரண்டு தடுப்பூசிகளுமே தகுதியான தடுப்பூசிகளே- அமைச்சர் மா.சுப்ரமணியன்

 

இரண்டு தடுப்பூசிகளுமே தகுதியான தடுப்பூசிகளே- அமைச்சர் மா.சுப்ரமணியன்

சைதாப்பேட்டையில் உள்ள அண்ணை வேளாங்கண்ணி கல்லூரியில் தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் சார்பில் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டு தடுப்பூசிகளுமே தகுதியான தடுப்பூசிகளே- அமைச்சர் மா.சுப்ரமணியன்

இதில் கலந்துகொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிக்கையாளர்களை மிகவும் மதிக்க கூடியவர். பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்து மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து வந்தவர். அவரைப் போலவே நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பத்திரிக்கையில் வரும் அரசு தொடர்பான செய்திகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எந்தத் துறையின் கீழ் செய்தி வருகிறதோ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிடுகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தான் பத்திரிகையாளர்களுக்கு என தனியே தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என்று கூறினார். கொரோனா இரண்டாவது அலைக்கு செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் அப்படியே இருக்கும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் நம்மால் சமாளிக்க முடியும். தடுப்பூசி வருகைக்கு ஏற்ப மக்களை வரவழைத்து தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை கொடுத்து முகாம்களில் அவர்களை பரிசோதித்து தடுப்பு ஊசி செலுத்தப்படும்.

சென்னையை பொறுத்தவரை முழுமையாக தொற்று குறைந்துள்ளது, தேவைப்படும்போது சிகிச்சை மையங்கள், பரிசோதனை மையங்கள் மற்றும் பணியாளர்கள் அதிகப்படுத்தப்படுவர். பெரிய அளவிலான சந்தோசம்என்ன என்றால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளது தான். போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கூடுதலாக தடுப்பூசி பெற்று கொண்டிருக்கிறோம். மேலும் கோவிஷில்ட், கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தகுதியுள்ள தடுப்பூசிகள் தான். ஐ.சி.எம்.ஆர் சான்று அளித்த பிறகுதான் தடுப்பூசி போடப்படுகிறது” எனக் கூறினர்.