”கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரத்ததானம் கொடுக்கலாமா?”

 

”கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரத்ததானம் கொடுக்கலாமா?”

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் அளிக்கலாம்; அச்சம் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரத்ததானம் கொடுக்கலாமா?”

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று ரத்ததானம் அளித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகம் முழுவதும் ரத்த தானம் அளிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாகிறாது. இந்திய அளவில் ரத்த தானம் அளிக்கும் இடங்களில் தமிழகம் முதல் 4 இடங்களில் உள்ளது. 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு இந்திய அளவில் குருதிப்படை அளிப்பதில் மேற்கு வங்காளம் முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருந்தது. அரசு சார்பில் இயங்கி வரும் 99 ரத்த மையங்களிலும், 210 தனியார் ரத்த மையங்களிலும் ரத்தம் சேகரிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய தேவையைக் காட்டிலும் இரத்ததானம் அளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் ரத்ததானம் செய்வதில் எந்த அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம், அளிக்கலாம்” என தெரிவித்தார்.