எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

 

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி என்பதால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றி விடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் தனக்கு ஒரு வீடு இருக்க வேண்டும் என்றும், அது கட்சி அலுவலகம் ஆகவும் இயங்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் திருச்சியில் ஒரு இடம் வங்கி அதில் பங்களாவை கட்டினார்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

திருச்சி உறையூர் பகுதியில் இந்திராநகர் அருகில் அந்த பங்களா இருக்கிறது. ஒரு லட்சம் சதுர அடியில் இருக்கும் அந்த பங்களா இடம் ஒரு பாதிரியாரிடம் இருந்து வாங்கப்பட்டது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னர் அவரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசுகளான சத்தியபாமா, பிரபாகரன், சந்திரன், ராமமூர்த்தி, சுகுமார், லீலாவதி , விஜயலட்சுமி, ராஜேந்திரன், பாலு விஜயகுமார் ஆகிய 10 பேருக்கு சொந்த மாக மாறியது அந்த பங்களா. 10 பேரின் பெயரிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பத்திரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

அதாவது, எம்ஜிஆர் எம். ஜி. ராமச்சந்திரன் என்ற பெயரில் இருந்த அந்த இடத்தை, அதிமுக அதிகாரத்தில் இருந்தவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் என்று திருத்தம் செய்துவிட்டதால், எம்ஜிஆரின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமை பறிபோய் இருக்கிறது. மீண்டும் அந்த உரிமையை பெற போராடிக் கொண்டிருக்கிறார் சார்லஸ்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

சார்லஸின் இந்த முயற்சியை அடுத்து சந்திரன் நேரில் சென்று சார்லஸை சந்தித்து மீண்டும் நமக்கு இந்த உரிமையை பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டு அவரும் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அவர் காலமாகிவிட்டார். இந்நிலையில் சார்லஸ் மட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை விடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆரின் கட்சியை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவரின் வாரிசுகள் ஆன எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையை பறித்து விட்டனர் என்று கூறி வருகிறார் சார்லஸ்.