பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம்!

 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம்!

பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘கர்மயோகி’ படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சினிமாவில் எப்போதும் ஓர் அலை வீசிக் கொண்டே இருக்கும். ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதேபோல பேய்ப்படங்கள் வரும். அடிதடி, அரசியல் படம் மெகா வசூல் குவித்தால் அடுத்தடுத்து அதே பாணியில் படங்கள் வெளியாகும். அந்த வகையில் இப்போது அரசியல் தலைவர்களின் பயோபிக் படங்கள் வெளியாகி வருகின்றன. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு, முன்னாள் பிரதமர் மன்மோகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்ற வரிசையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, கர்மயோகி என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. சஞ்சய் திரிபாதி இயக்கத்தில், சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துவரும் இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏழைத்தாயின் மகன் எப்படி பிரதமரானார் என்கிற ஒன்லைன்தான் கதை. இப்படத்தின் கதை.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கர்மயோகியின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை பதிவிட்டுள்ள லைகா நிறுவனம், ”70 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளது.