ஷிவானியின் பவர்புல் குத்தாட்டம்… சோம் சேகரின் எனர்ஜிட்டிக் ஆக்டிங் – லைகா கோவை கிங்ஸின் “ஜன கன மன” ஆன்தெம்!

 

ஷிவானியின் பவர்புல் குத்தாட்டம்… சோம் சேகரின் எனர்ஜிட்டிக் ஆக்டிங் – லைகா கோவை கிங்ஸின் “ஜன கன மன” ஆன்தெம்!

ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 2016ஆம் ஆண்டு இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், சேலம் ஆகிய எட்டு நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடராக நடத்தப்படுகிறது. இந்தத் தொடரின் ஐந்தாவது சீசன் நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.

ஷிவானியின் பவர்புல் குத்தாட்டம்… சோம் சேகரின் எனர்ஜிட்டிக் ஆக்டிங் – லைகா கோவை கிங்ஸின் “ஜன கன மன” ஆன்தெம்!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராக்கன்கள், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்கள், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீச்செம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 28 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. லைகா கோவை கிங்ஸ் அணியில் பிரபல வீரர்களான நடராஜன், ஷாருக்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது கோவை கிங்ஸின் அதிகாரப்பூர்வமான ஆன்தெம் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் பிக்பாஸ் பிரபலங்களான ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல நடராஜனும், ஷாருக்கானும் சில பிரேம்களில் வந்து செல்கின்றனர். ஜன கன மன என்று ஆரம்பிக்கும் இந்த ஆன்தெம் பவர்புல் பேக்கேஜாக வந்திருக்கிறது. இந்தப் பாடலைப் பாடுவது போல நடித்திருக்கிறார் சோம் சேகர். ஆனால் உண்மையில் பின்னணியில் பாடியவர்கள் வேறு பாடகர்கள். குத்தாட்டம் போடுவதில் கில்லியான ரசிகர்களின் செல்லப்பிள்ளையான ஷிவானியின் நடனம் எனர்ஜி ஏற்றும் ரகமாக இருக்கிறது. தற்போது கோவையன்ஸின் ஆன்தெமாக இந்த ஆன்தெம் மாறியுள்ளது.