ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்த மதன்… புகழ்ந்து பேச ரூ.5 லட்சம் வரை சம்பளம்!!

 

ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்த மதன்… புகழ்ந்து பேச ரூ.5 லட்சம் வரை சம்பளம்!!

ஆபாச யுடியூபர் மதனின் சொகுசு கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் விளையாடி வந்த மதன் சிறுவர் சிறுமியரை ஆபாசமாக பேசி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 150க்கும் மேற்பட்டோர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்த நிலையில் அதனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். இதனிடையே அவருடன் சேர்ந்து அவரது மனைவி கிருத்திகா ஆபாசமாக பேசிய வீடியோ வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவர் அந்த யூடியூப் சேனலில் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் தர்மபுரியில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மதன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார் . போலீசாரின் காலில் விழுந்து தான் செய்தது தவறு என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்த மதன்… புகழ்ந்து பேச ரூ.5 லட்சம் வரை சம்பளம்!!

இந்நிலையில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் , யூடியூபில் ஆபாசமாக பேசி ரூ.4 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.
ரூ.4 கோடியும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணத்தில் வாங்கிய இரண்டு ஆடி கார்களையும் பறிமுதல் செய்தது போலீஸ். யூடியூபில் புகழ்ந்து பேசவும், திட்டுவது போல் நடிக்கவும் ரூபாய் 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை சம்பளம் கொடுத்துள்ளார் மதன். அவருடன் யூடியூபில் ஆபாசமாக பேசிய தோழிகளையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.