லுங்கி, உள்ளாடை… சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

 

லுங்கி, உள்ளாடை… சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அவர்கள் அணிந்திருந்த லுங்கிகள், உள்ளாடை, லத்தி, பி.வி.சி பைப் உள்ளிட்டவை கிடைத்த ஆதாரங்கள் என்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லுங்கி, உள்ளாடை… சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை, மகன் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக மக்கள் கொந்தளிப்பு அதிகரிக்கவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ ஏற்றுள்ளது.

லுங்கி, உள்ளாடை… சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு விசாரணை செய்தனர். வீடியோ ஆதாரம் கிடைத்தது, முக்கிய ஆதாரம் கிடைத்தது என்று பல செய்திகள் வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பான கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் அணிந்திருந்த மூன்று லுங்கிகள், உள்ளாடை, காவல் நிலையத்தில் இருந்த லத்தி, பி.வி.சி பைப், பிஸ்கட் பாக்கெட்.

லுங்கி, உள்ளாடை… சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!பிரெட் பாக்கெட் உள்ளிட்டவை ஆதாரங்களாக சேகரிக்கப்பட்டதாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சி உள்ளிட்டவை ஆதாரமாக வழங்கப்படவில்லை. போலீஸ் நிலைய பதிவு, கோவில்பட்டி கிளை சிறையில் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட பதிவுகள் ஒப்படைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.