டி.டி.வி ஆதரவாளர்களுக்கு அதிர்ஷ்டம்... நாலாபுறமும் கொட்டப்போகும் பண மழை..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainடி.டி.வி ஆதரவாளர்களுக்கு அதிர்ஷ்டம்... நாலாபுறமும் கொட்டப்போகும் பண மழை..!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஏதோ மாநகராட்சி, நகராட்சி அளவில் டி.டி.வி.தினகரனின் அமமுக பக்கம் சிலர் இருந்தார்கள். ஆனால் கிராம அளவில் சொல்லிக் கொள்ளும்படி டி.டி.வி.,க்கு கட்சி உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அத்திபூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருக்கிறார்கள். இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறாரார் டி.டி.வி.

ttv dhinakaran

எந்த கிராமத்துக்கு போய் உறுப்பினர்களை பிடித்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறுவது என்று நினைக்கிறாராம். பஞ்சாயத்தை பொறுத்தவரை சொந்த செல்வாக்குதான் முக்கியம் என்பதால் கட்சியை உறுப்பினர்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களோ என்று நினைக்கிறாராம். 

இருந்தாலும் கவுரவத்துக்கு தன் பாக்கெட் மணியை கொடுத்து சிலரை நிற்க வைக்க முயற்சி செய்வதாக தகவல்.  இவரே சீட் கொடுத்தாலும் வேண்டாம்டா சாமினு ஓடுகிறார்களாம் நிர்வாகிகள். இன்னொரு பக்கம், அதிமுகவினரும், திமுகவினரும் அமமுக தொண்டர்களை பணம் கொடுத்து வளைக்கப்பார்க்கிறது. ஆக மொத்தத்தில் அமமுக உள்ளாட்சித் தேர்தலில் பண மழையில் நனைய தயாராகி விட்டனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.