எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபம் ரூ.497 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு

 

எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபம் ரூ.497 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.496.8 கோடி ஈட்டியுள்ளது.

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.496.8 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19.3 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபமாக ரூ.416.4 கோடி ஈட்டியிருந்தது.

எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபம் ரூ.497 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு
எல் அண்ட் டி இன்போடெக்

2021 ஜூன் காலாண்டில் எல் அண்ட் டி இன்போடெக் வருவாய் ரூ.3,462.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17.4 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் எல் அண்ட் டி இன்போடெக் வருவாயாக ரூ.2,949.2 கோடி ஈட்டியிருந்தது. எல் அண்ட் டி இன்போடெக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பங்குதாரர்களுக்கு சிறப்பு டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபம் ரூ.497 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு
எல் அண்ட் டி இன்போடெக்

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவன பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்டாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எல் அண்ட் டி இன்போடெக் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.93 சதவீதம் குறைந்து ரூ.4,288.00ஆக இருந்தது.