இலங்கையிலேயே LPL போட்டிகள் – தொடங்கும் தேதியில் மாற்றம்

 

இலங்கையிலேயே LPL போட்டிகள் – தொடங்கும் தேதியில் மாற்றம்

இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் போலவே எல்.பி.எல் எனும் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது இன்னும் ஒத்தி வைக்கப்பட்டு 27-ம் தேதி தொடங்குகிறது.

இலங்கையிலேயே LPL போட்டிகள் – தொடங்கும் தேதியில் மாற்றம்

இலங்கையில் கொரோனா தொற்று சமீப காலமாக அதிகரிப்பதால், அங்கு எல்.பி.எல் போட்டிகள் நடக்குமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டது. மேலும், ஐபிஎல் போட்டிகள் போல ஐக்கிய அமீரகத்தில் நடக்குமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், எல்.பி.எல் போட்டிகளை இலங்கையிலேயே நடத்திக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்திற்கு இலங்கை அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலேயே LPL போட்டிகள் - தொடங்கும் தேதியில் மாற்றம்

வெளிநாட்டு வீரர்களை தனிமைப்படுத்தும் காலத்தை 14 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்தும் உள்ளது. மேலும், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களைப் போட்டியைக் காண மைதானத்திற்கு அனுமதிப்பார்களா… என்பது சந்தேகம்தான். ஏனெனில், இலங்கையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினால், தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.