தேர்தல் முடிவுகள் தொடர்பாக எந்தவித கருத்து கணிப்புகளும் நடத்தவில்லை- லயோலா கல்லூரி

 

தேர்தல் முடிவுகள் தொடர்பாக எந்தவித கருத்து கணிப்புகளும் நடத்தவில்லை- லயோலா கல்லூரி

தேர்தல் வெற்றிவாய்ப்பு குறித்து வெளியான கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில், வெற்றிவாய்ப்பு யாருக்கு என்பது குறித்து லயோலா நிர்வாகம் வெளியிட்டதாக கூறி இன்று கருத்துக்கணிப்பு வெளியானது, இதில், அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. மேலும் DMK-140-150 இடங்களும் ADMK-35-40 இடங்களும் வெற்றிப்பெரும் என வெளியான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக எந்தவித கருத்து கணிப்புகளும் நடத்தவில்லை- லயோலா கல்லூரி

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை. தேர்தல் போக்குகளை பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே லயோலா கல்லூரி என்ற பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால், ஊடக நண்பர்கள் அதனைப் புறக்கணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை, லயோலா கல்லூரி என்ற பெயரை பயன்படுத்தும் தனிநபர்களையும், மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.