வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஜூன் 9 முதல் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் ஜூன் 11 மற்றும் ஜூன் 12ம் தேதியில் லட்சத் தீவு மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஜூன் 13 அன்று கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதியில் 45-55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைசென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளது.