அரபிக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ‘நிசர்கா’ என பெயர்

 

அரபிக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ‘நிசர்கா’ என பெயர்

மும்பை: அரபிக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ‘நிசர்கா’ என பெயர் சூட்டப்பட உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் இவ்விரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜூன் 5-ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

அரபிக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ‘நிசர்கா’ என பெயர்

கேரளாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவ மழை பெய்வதற்கு உண்டான சாதகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், வட இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்றிரவு முதல் லேசான அல்லது கனமழை பெய்தது. இன்று அத்தகைய மாநிலங்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறினால் அந்த புயலுக்கு ‘நிசர்கா’ என பெயர் சூட்டப்படும்.