3ஆம் பதக்கத்தை வாங்கிதந்தார் 3ஆம் வீராங்கனை… ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்!

3ஆம் பதக்கத்தை வாங்கிதந்தார் 3ஆம் வீராங்கனை… ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்!

டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. முதல் நாளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பின்னடைவு ஏற்பட்டாலும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்து இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார் மீராபாய் சானு. ஆனால் அதற்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் பதக்கம் வெல்லாத இந்தியாவுக்கு வெண்கலத்தை வாங்கி தந்தார் பி.வி.சிந்து. இருப்பினும் நிறைய வீரர், வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் பதக்கத்தைக் கைநழுவ விடுகின்றனர்.

3ஆம் பதக்கத்தை வாங்கிதந்தார் 3ஆம் வீராங்கனை… ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்!

தற்போது மூன்றாவது பதக்கத்தை மூன்றாவது வீராங்கனை ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில் லோவ்லினா தான் அந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அதிரடியாக விளையாடி பதக்கத்தைத் தட்டிச்சென்றுள்ளார். இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனி வீராங்கனை நாடினையே தோற்கடித்து காலிறுதிக்குள் லோவ்லினா நுழைந்தபோதே இவர் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3ஆம் பதக்கத்தை வாங்கிதந்தார் 3ஆம் வீராங்கனை… ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்!

அந்த எதிர்பார்ப்பை லோவ்லினா இன்று நிறைவேற்றி காண்பித்திருக்கிறார். இது ஒரு வெற்றிக்கரமான தோல்வி என்றே கூற வேண்டும். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்தை லோவ்லினா உறுதிசெய்திருக்கிறார். மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று உலகின் நம்பர் 1 வீராங்கனையான துருக்கியைச் சேர்ந்த சர்மெனெல்லி பஸ்னாஸை எதிர்த்து மோதினார். ஆரம்பத்தில் இருந்தே துருக்கி வீராங்கனை லோவ்லினாவை எதிர் தாக்குதல் செய்ய விடாமல் தடுத்து அதிரடியாக விளையாடினார். முடிவில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் லோவ்லினாவை வீழ்த்தினார்.

3ஆம் பதக்கத்தை வாங்கிதந்தார் 3ஆம் வீராங்கனை… ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்!

இதில் தோல்வியுற்றாலும் அரையிறுதி வரை முன்னேறியுள்ளதால் லோவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை லோவ்லினா படைத்துள்ளார். அசாம் மாநிலத்தில் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒலிம்பிக்கில் நுழைந்து இன்று கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தை வென்று காட்டியிருக்கிறார் லோவ்லினா.