Home தமிழகம் ஊரைவிட்டு ஓடிய மகள்! சாதூர்யமாக பேசி அழைத்துவந்து பிரித்த தந்தை! சோகத்தில் பெண் தற்கொலை

ஊரைவிட்டு ஓடிய மகள்! சாதூர்யமாக பேசி அழைத்துவந்து பிரித்த தந்தை! சோகத்தில் பெண் தற்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரில் வசிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த முத்து பழனியம்மாள் ஆகியோரின் மகள் முத்துப்பாண்டியம்மாள்(வயது 20) என்பவரும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (20) என்பவரும் பண்னைக்காடு வீரம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் விரும்பி காதலித்து வந்தனர். இதை அறிந்த முத்துகிருஷ்ணன் தந்தை முத்து இவர்களின் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளார்.இதனால் இருவரும் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக 3 தினங்கள் குடும்பம் நடத்தியுள்ளனர்.

rep image

பையனின் தகப்பனார் முத்து இருவரையும் ஏற்றுக் கொள்வதாக சமாதானம் செய்து சென்னையிலிந்து தேவதானப்பட்டிக்கு வரவழைத்து ஊர் பஞ்சாயத்தில் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேவதானப்பட்டி காவல் துறை பையனின் வயது காரணம் காட்டி பிரித்துவைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டியம்மாள் இன்று (15.11.2020) ஞாயிறு காலை 11மணிக்கு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனினும் இரவு 9மணி வரை காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்த முத்துப்பாண்டியம்மாள் உடல் அவரின் வீட்டில் தான் உள்ளது. மனிதநேயமிக்க காவல் துறை முறையாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து,முத்துப்பாண்டியம்மாள் தற்கொலைக்கு காரணமாகவர்கள் கைது செய்ய வேண்டும் என மாநில பொதுச்செயலாளர் தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

தமிழகத்தில் மேலும் 621 பேருக்கு கொரோனா, 5பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக...
Do NOT follow this link or you will be banned from the site!