ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்… வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி காதலர்கள் மனு!

 

ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்… வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி காதலர்கள் மனு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று வாடிவாசல் முன்பு திருமண உறுதியேற்பு நிகழ்ச்சியை நடத்த காதலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.

அலங்காநல்லூரை சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (வயது 28), மற்றும் தற்சார்பு வாழ்வியல் பயணி என்ற சமூகஆர்வலர் வித்தியாதரணி (வயது 31) ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். அப்போது இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர், திருமண நிச்சயம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்… வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி காதலர்கள் மனு!

இந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகள் கழித்து மணம்முடிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி சந்தித்த நாளான அதே தேதியிலேயே, குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது வாடிவாசலில் முன்பு வைத்து திருமண உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.