`நீ அழகா இருக்கே… உன் டிக்டாக்கை ரசித்தேன்… உன்னை ஒரு வருடத்துக்கு முன் பார்த்திருந்தால்..!- கல்லூரி மாணவியை அதிரவைத்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஆடியோ

`நீ அழகா இருக்கே… உன் டிக்டாக்கை ரசித்தேன்… உன்னை ஒரு வருடத்துக்கு முன் பார்த்திருந்தால்..!- கல்லூரி மாணவியை அதிரவைத்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஆடியோ

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரான கல்லூரி மாணவிக்கு மாநகராட்சி அதிகாரி ஒருவர், காதல் தொல்லை கொடுகும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று நோய் கண்டறியும் மைக்ரோ குழுவில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தன்னார்வ பணிகளை, கல்லூரி மாணவ, மாணவிகளும் மேற்கொள்கின்றனர்.

`நீ அழகா இருக்கே… உன் டிக்டாக்கை ரசித்தேன்… உன்னை ஒரு வருடத்துக்கு முன் பார்த்திருந்தால்..!- கல்லூரி மாணவியை அதிரவைத்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஆடியோ

இந்த நிலையில், சென்னை ராயபுரம் மண்டலத்தில், மண்ணடி தம்பு செட்டி தெருவில் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னார்வலரான கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதேபகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கமலக்கண்ணன் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தற்போது அந்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோவில், “கல்லூரி மாணவியை அழகாக இருப்பதாகவும் அவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும் கூறும் கமலக்கண்ணன், இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் திருமதி கமலக்கண்ணன் ஆகியிருப்பாய்” என காதல் வார்த்தை பேசியுள்ளார்.

மேலும் அந்த ஆடியோவில், பிடி கொடுக்காமல் பேசும் அந்த மாணவியிடம், தான் யார் தெரியுமா?மாநகராட்சி ஏ.இ என்றால் போலீஸ் ஏ.சி மாதிரி என்றும், தான் மாதம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அப்படி என்றால் நீ எப்படி இருக்கலாம் நினைத்துக் கொள் என ஆசைவார்த்தை கூறி வலை விரிக்கிறார்.

`நீ அழகா இருக்கே… உன் டிக்டாக்கை ரசித்தேன்… உன்னை ஒரு வருடத்துக்கு முன் பார்த்திருந்தால்..!- கல்லூரி மாணவியை அதிரவைத்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஆடியோ

இதனிடையே, மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் கவனத்திற்கும் மாணவி எடுத்துச் சென்றுள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் இரவு பகல் என்று பாராமல் பணியாற்றி வரும் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் இப்படிப்பட்ட அதிகாரியின் இழிசெயல் அவர்களின் பணிக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் அமைந்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் சக அதிகாரிகள்.