`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

 

`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

17வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருவை கலைக்க சொன்னதோடு, திருமணம் செய்ய மறுத்ததால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் காதலன்.

`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றம்). விவசாயியான இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். 17 வயதான மூத்த மகள் பிரியா (பெயர் மாற்றம்) 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். ஊரடங்கால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் பிரியா. அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசனுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் விளைவாக பிரியா கருத்தரித்தார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக வெங்கடேசனிடம் பிரியா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், கர்ப்பத்தைக் கலைக்கும்படி பிரியாவிடம் கூறியுள்ளார். அவர் கருவை கலைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பிரியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர், தனது மகள் கர்ப்பம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரித்தபோது, வெங்கடேசன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கியதாகவும், தற்போது குழந்தையை அழிக்கும்படி கூறுகிறார் என்றும் பிரியா கூறியுள்ளார். இதையடுத்து, வெங்கடேசன் குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறி தனது மகளை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால், பிரியாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வெங்கடேசனின் குடும்பத்தினர் விரும்பவில்லை. பிரியாவின் பெற்றோர் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் வெங்கடேசனின் பெற்றோர் மனம்மாறவில்லை.

`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

இதையடுத்து, வேறு வழியின்றி பிரியாவின் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர், வெங்கடேசனிடமும் பிரியாவிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், பிரியாவின் குடும்பத்தினரிடம் சில காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வெங்கடேசன் சிறைக்குச் சென்றால், உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும். அதனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவல் மாவட்ட எஸ்.பி-க்கு அலுவலகத்துக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதோடு, பிரியாவின் புகார் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டு ரிப்போர்ட்டை தெரிவிக்கும்படி திருத்தணி காவல்துறையினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரியாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வெங்கடேசனை து செய்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் வெங்கடேசனை ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது வெங்கடேசனை படம், வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றபோது திருத்தணி டி.எஸ்.பி. சேகர் தடுத்துள்ளார். இதனால் வெங்கடேசனை யாரும் படம் எடுக்க முடியவில்லை. வெங்கடேசனுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலதுறையினர் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.