‘காதலியை கொன்றுவிட்டார்கள்’ ; காதலன் போலீசில் புகார் : தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

 

‘காதலியை கொன்றுவிட்டார்கள்’ ; காதலன் போலீசில் புகார் : தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் விவேக். இவர் திருவரங்குளத்தில் சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததாக தெரிகிறது. தற்போது சாவித்திரி புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். விவேக் வேறு சமூகத்தினர் என்பதால் சாவித்திரி காதலை அறிந்த அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாவித்திரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து உள்ளனர். இது பிடிக்காத சாவித்திரி விவேக்கிடம் தன்னை அழைத்துக் கொண்டு வேறு எங்கேனும் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களின் உதவியுடன் ஒரு வாடகை காரில் சாவித்திரி மற்றும் விவேக் இருவரும் புதுக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூர் சென்றுள்ளனர்.

‘காதலியை கொன்றுவிட்டார்கள்’ ; காதலன் போலீசில் புகார் : தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

அப்போது குளித்தலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்களின் காரை மறித்து விவரத்தை கேட்டறிந்தனர். மேலும் இருவரின் வீட்டிலும் தொலைபேசி மூலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி விவேக் மற்றும் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது போலீசார் விவேக்கிற்கு 21 வயது முழுமையாகததால் இன்னும் நான்கு மாதகாலம் இருப்பதால் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி சாவித்திரியை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி தன்னை ஏதேனும் விடுதியில் சேர்த்து விடுங்கள். ஆனால் தான் வீட்டிற்குச் செல்லமாட்டேன் வீட்டிற்கு சென்றால், என்னை கொன்று விடுவார்கள் என்று கூறி அழுதுள்ளார். ஆனால் போலீசார் திருமண வயதை எட்டியதும் விவேக்கை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சாவித்திரியை அடித்து துன்புறுத்த கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே சாவித்திரிக்கு நிச்சயம் செய்து முடித்த மாப்பிள்ளை வீட்டார் இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

‘காதலியை கொன்றுவிட்டார்கள்’ ; காதலன் போலீசில் புகார் : தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி சாவித்திரி இறந்து விட்டதாகவும் அவரது உறவினர்கள் அனைவரும் அவரின் உடலை எரித்து இறுதி சடங்கு முடித்துவிட்டதாகவும் விவேக்குக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். அதில் சாவித்திரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் நிச்சயம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதை சாதாரண வழக்காக பார்க்காமல் ஆவணம் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

‘காதலியை கொன்றுவிட்டார்கள்’ ; காதலன் போலீசில் புகார் : தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

மேலும் சாவித்திரியின் மரணத்தில் உள்ள தடயங்கள் மற்றும் சடலத்தை அவரது பெற்றோர் வருவாய் துறையினருக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் சாவித்திரியின் தாயார் சாந்தி. அவரின் பெரியம்மா, மாமா, பெரியப்பா, தாய்மாமன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.