• March
    30
    Monday

Main Area

Main



வளர்த்தவரை மூச்சடைக்க வைத்த இரு நாய்குட்டிகள்! வைரல் வீடியோ

two dogs
two dogs

செல்லப்பிராணிகளுக்கு தங்களை வளர்த்தவர் மீது விஸ்வாசம் அதிகம் இருக்கும், குறிப்பாக நாய்களுக்கு. நாயை போல நன்றி உள்ள ஜீவனைப் பார்க்கமுடியாது. அந்தளவிற்கு தன்னை வளர்த்தவர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவை. தனது எஜமான் இறந்துவிட்டார் என தெரியாமல் அவருக்காக பல வருடங்கள் காத்திருக்கும் நாய்களை பற்றி நாம் அதிகம் கேள்வி பட்டிருப்போம்.

அதேபோல் ஒரு சம்பவம் தான் இது. ஒரு நாய் குட்டிகள் தன்னை வளர்த்தவரின் வருகைக்காக ரயில்நிலைய நடைமேடையில் காத்திருக்கின்றன. அவர் ரயிலிலிருந்து இறங்கி வந்ததும் இரண்டு நாய் குட்டிகளும் உணர்ச்சி வெள்ளத்தில் அவரை நோக்கிப்  பாய்கின்றன. தனது எஜமானரை சந்தித்துவிட்டு மகிழ்ச்சி பரவசத்தில் இரு குட்டிகளும் அவரின் மேல் மாறி மாறி பாய்ந்ததால் அவர் திக்குமுக்காடிப் போனார். இந்த காட்சிகள் பார்ப்போரை நெகிழச் செய்தது.

2018 TopTamilNews. All rights reserved.