காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

 

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, வாசவி நகரைச் சேர்ந்த முருகேசனின் மகன் கண்ணன். இவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து விட்டு முதுகலை ஆர்தோ படிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். கடந்த ஜூன்1-ம் தேதி முதல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த டாக்டர் கண்ணன், ஜூலை 19-ம் தேதி மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக ஏழுகிணறு போலீஸிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரித்தனர்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

இதற்கிடையில் தகவல் தெரிந்து சென்னைக்கு வந்த டாக்டர் கண்ணனின் அப்பா முருகேன், அம்மா முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் மருத்துவக்கல்லூரி, போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டாக்டர் கண்ணனின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தற்போது டாக்டர் கண்ணனின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்த டாக்டர் கண்ணனுக்கு தலை பகுதியில் எந்தவித காயமும் இல்லை என்றும் ஆனால் உடலில் மற்ற இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது, கண்ணனின் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

இதுகுறித்து கண்ணனின் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். “அப்பா பெயர் முருகேசன். அம்மா முத்துலட்சுமி. ஒரு பெண், 2 பையன்கள். பொண்ணுக்கும் மூத்த மகனுக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி பையன்தான் கண்ணன். அப்பா ஹோட்டல் நடத்திவருகிறார். சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தான் கண்ணன். அதனால் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பான். அதனால்தான் அவனுக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ஜில சீட் கிடைத்தது. அங்கும் நன்றாக படித்தான். எம்.பி.பி.எஸ் படித்தப்பிறகு மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று கூறினான்.

உடனே குழந்தைகள் தொடர்பாக படி என்று கூறினேன். அதற்கு அவன், குழந்தைகள் தொடர்பாக படிக்க வேண்டும் என்றால் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் ரொம்ப சிரமம். நான் சிகிச்சை அளிக்கும் குழந்தைக்கு ஏதாவது ஒன்று நடந்துக் கொண்டால் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறினான். அந்தளவுக்கு குழந்தைகள் மீது பாசமாக இருப்பான். அடுத்து எம்.டி படி என்று கூறினேன். அதற்கும் எம்.டி படிக்க வேண்டும் என்றால் நிறைய மருந்துகள் தொடர்பான அனுபவங்கள் வேண்டும். மருந்துகளை மாற்றி கொடுத்தால் சிக்கல். எனவே எம்.டி-யும் வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன்பிறகுதான் அவனுடைய சீனியர்கள் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்து விட்டு ஆர்தோ படிக்கிறேன் என்று தெரிவித்தான்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

உடனே வடமாநிலங்களுக்கெல்லாம் போய் படிக்க வேண்டாம் என்று கூறினேன். உடனே நான் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்கிறேன். அதுவும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் படிக்கிறேன் அப்பா என்று கூறினான். அவன் சொன்னப்படி நல்ல மார்க் எடுத்தான். அவன் விருப்பப்பட்டபடியே ஸ்டான்லியில் சீட்டும் கிடைத்தது. கடந்த ஜூன் 1-ம் தேதி காலேஜ்ஜில் சேர்ந்தான். இதற்கிடையில் அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினோம். உடனே பெண் பார்த்தோம். அவனைப் போல டாக்டர் பொண்ணு குறித்த தகவல் கிடைத்தது. உடனே அவனிடமும் ஆலோசித்த பிறகு அந்த டாக்டர் பொண்ணை பேசி முடித்தோம். கொரோனா என்பதால் நிச்சயதார்த்தம் நடத்தவில்லை.

எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டதால் டாக்டர் கண்ணனும் அந்தப் பொண்ணும் மனம்விட்டு போனில் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கும் கண்ணன் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு வீட்டில் பேசக் கூட நேரமில்லை. கொரோனா பணி முடிந்து தனிமைப்படுத்தியிருந்த காலக்கட்டத்தில் வீட்டுக்கும் டாக்டர் பெண்ணிடமும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறான். அதற்கான ஆடியோ எங்களிடம் இருக்கிறது. ஆனால் டாக்டர் கண்ணன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் பேப்பர்களிலும் மீடியாக்களிலும் காதல் தோல்வி, பணிச்சுமை யால் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை என செய்தி வெளியானது. அந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

அவன் மரணத்துக்கு காதல் தோல்வி, பணிச்சுமை காரணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தவே ஒரு வாரக்காலமாகிவிட்டது. காவல் நிலையத்தில் நாங்கள் கொடுத்த புகாரில் சந்தேக மரணம் என்றுதான் குறிப்பிட்டுள்ளோம். ஏனெனில் நாங்கள் அவனைப் பார்த்தபோது அவனின் கால்பகுதியிலும் கைகளிலும் மட்டும்தான் காயங்கள் இருந்தன. நீங்களே சொல்லுங்கள் 3-வது மாடியிலிருந்து ஒருவன் குதித்து தற்கொலை செய்து கொண்டால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்படும். அதோடு நிச்சயம் எலும்பு முறிவுகள் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் டாக்டர் கண்ணனுக்கு ஒரு எலும்பு முறிவுகூட இல்லை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விடுதியில் நடந்த சம்பவத்துக்கு டீன் அல்லது விடுதி பொறுப்பாளர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் டாக்டர் கண்ணன் ரொம்பவே நல்ல மாணவன், அவரின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று மட்டும்தான் சொல்கிறார்கள். அவன் எப்படி இறந்தான். இறப்புக்கு என்ன காரணம் என்று மருத்துவக்கல்லூரி தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை. அவன் சேர்ந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதனால், குறிப்பிடும் வகையில் அவனுக்கு நண்பர்கள் அங்கு இல்லை. ஆனால் விடுதியில் இருப்பவர்களிடம் விசாரித்தால் நிச்சயம் உண்மை தெரியவரும்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

விடுதியிலும் சரி மருத்துவமனையிலும் சரி சிசிடிவி கேமராக்கள் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் மாடியிலிருந்து டாக்டர் கண்ணன் கீழே விழும் எந்தக்காட்சியும் சிசிடிவியில் பதிவாகவில்லை என போலீஸார் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால் அதிகாலை ஒன்றரை மணியளவில் விடுதிக்குள் டாக்டர் கண்ணன் செல்லும் காட்சி மட்டும் ஒரேஒரு சிசிடிவியில் பதிவாகியிருப்பதாக போலீஸார் சொல்கின்றனர். அம்மாவிடம் இரவு 11 மணியளவில் போனில் கண்ணன் பேசியிருக்கிறான். அப்போது நார்மலாகத்தான் பேசியுள்ளான். அம்மாவை சாப்பிட்டுவிட்டீர்களா என்று கேட்டுள்ளான். தானும் சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு செல்வதாகக் கூறியுள்ளான். இரவு 11 மணியளவிலிருந்து அதிகாலை 1 மணி வரை டாக்டர் கண்ணன் எங்கு இருந்தான் என்பதற்கு விடை தெரியவில்லை. விடுதிக்கு வந்த கண்ணன் தூங்குவதற்கு முன் அலாரம் வைத்துள்ளான். அதில் 4.30 மணிக்கு அலாரம் அடித்துள்ளது. ஆனால் கண்ணன் உயிரோடு இல்லை என்றனர் கண்ணீருடன்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

ஏழுகிணறு போலீஸாரிடம் கேட்டதற்கு, “டாக்டர் கண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை முருகேசன் புகாரளித்துள்ளார். 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்கூட உடலில் காயங்கள் அதிகளவில் இருப்பதாக மட்டுமே டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கெமிக்கல் டெஸ்ட் வந்தபிறகுதான் டாக்டர் கண்ணன் மரணத்துக்கான காரணம் தெரியவரும். அதிகாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி கேமராவிலும் டாக்டர் கண்ணன் கீழே விழும்போது எந்தக் காட்சியும் பதிவாகவில்லை. அதனால் விடுதியில் இருக்கும் மருத்துவ மாணவர்கள், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மற்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்”என்றனர்.

காதல் தோல்வி, பணிச்சுமை என இரண்டுமே இல்லை – டாக்டர் கண்ணன் மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுக்கள்!

இதற்கிடையில் டாக்டர்கள் சங்கம் நிர்வாகிகள் கூறுகையில், “டாக்டர் கண்ணன் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றையக்காலக்கட்டத்தில் கொரோனா என்ற சவாலான பணியை ஒவ்வொரு டாக்டர்களும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. கொரோன பணியோடு மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியதுள்ளது. அதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, நீண்ட நேரம் பணி, கொரோனா தொற்று பாதிப்பு என பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர்கள், தங்களின் உயிரைப் பணயம் வைத்து கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே டாக்டர் கண்ணன் மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளியில் வர வேண்டும். இனிமேலும் இதுபோன்ற ஒரு சோக நிகழ்வு நடைபெறாமலிருக்க அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் “என்றனர்.

இதற்கிடையில் டாக்டர் கண்ணன் மருத்துவ சீட்டுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அணுகுண்டை தூக்கிப் போட்டுள்ளார்தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் தாமோதரன்யாதவ். “டாக்டர் கண்ணனுக்கு மெரிட்டில் இந்த சீட் கிடைத்துள்ளது. ஆனால் இந்தச் சீட்டை 2 கோடி ரூபாய்க்கு வாங்ககூட ஆள்கள் இருக்கிறார்கள். தற்போது கண்ணன் உயிரோடு இல்லாததால் அவருக்கு அடுத்தபட்டியலில் காத்திருப்பவர்கள் இந்தச் சீட் கிடைக்கும். எனவே, மருத்துவ சீட்டுக்காக கண்ணன் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடாது” என்று தாமோதரன்யாதவ் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
அந்தச் சந்தேகத்துக்கும் போலீஸ் விசாரணையில் விடை கிடைக்குமா…

எஸ்.செல்வம்.