‘வாடிவாசல் முன் திருமணம்’ செய்து கொள்ள அனுமதி கோரி காதல் ஜோடி மனு!

 

‘வாடிவாசல் முன் திருமணம்’ செய்து கொள்ள அனுமதி கோரி காதல் ஜோடி மனு!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கோரி காதல் ஜோடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரும் வித்தியாதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் கதையை அறிந்த பெற்றோர்கள், திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். அதன் படி, இந்த காதல் ஜோடி தமிழ் மரபு வழியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது.

‘வாடிவாசல் முன் திருமணம்’ செய்து கொள்ள அனுமதி கோரி காதல் ஜோடி மனு!

இந்த நிலையில், இன்று காலை கார்த்திகேயனும் வித்தியாதாரணியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காக அமைக்கப் படும் வாடிவாசளலுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுகென்றே புகழ்பெற்ற அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிற்கும் மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. இத்தகைய பரபரப்பான சூழலில் இந்த தம்பதியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.