“பணத்தை அனுப்புங்க , பலான படத்தை அனுப்பறேன் -ஒரு இன்ஜினீயரின் இழிவான செயல்.

 

“பணத்தை அனுப்புங்க , பலான படத்தை அனுப்பறேன் -ஒரு இன்ஜினீயரின் இழிவான செயல்.

குழந்தைகள் பலான படத்தை ஆன்லைனில் விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்த ஒரு பொறியாளரை போலீசார் கைது செய்தார்கள் .

“பணத்தை அனுப்புங்க , பலான படத்தை அனுப்பறேன் -ஒரு இன்ஜினீயரின் இழிவான செயல்.

உத்திரப்பிரதேச மாநிலம்  சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த  பொறியியலாளர் நீரஜ் யாதவ், டெல்லியைச் சேர்ந்த தனது நண்பரான குல்ஜீத் சிங் மக்கனுடன் சேர்ந்து கொண்டு குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டார் .அதன் படி அவர்களிருவரும் குழந்தைகளின் ஆபாச படங்களை எடுத்து அதை சமூக  ஊடகத்தில் விற்று பணம் சம்பாதிக்க முடிவெடுத்தனர் .

அதனால் கடந்த பல ஆண்டுகளாக  நீரஜ் இந்த பிஞ்சுகளின் பலான படத்தை எடுத்து அதை இன்ஸ்டாக்ராமில் கேட்போருக்கு அனுப்பி வைப்பார் .அவர்கள் அதற்கான பணத்தை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார்கள் .மேலும் அவருக்கு கடந்த ஆண்டு கொரானா வைரஸ்  நோய் பரவல் காரணமாக ஏற்ப்பட்ட பொருளாதார இழப்பால் வேலை பறிபோனது. அதனால் முழு நேர தொழிலாக குழந்தைகள் ஆபாச  படம் விற்கும் வேலையில் ஈடுபட்டார் .

அதன்படி கடந்த ஆண்டு ஆன்லைனில் இந்த படங்களை விற்பனை  செய்வது பற்றி டார்க் வெப்சைட்டில் விளம்பரம் செய்தார் .அதை பார்த்த பலர் அவரிடம் அந்த மாதிரி ஆபாச படங்களை கேட்டனர்.அதனால் அவர்களிடம் பணத்தை பெற்று இந்த படங்களை  அனுப்பிய அவரைப்பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது .அதனால் போலீசார் ரகசியமாக அவரை கண்காணித்து கடந்த ஞாயிற்று கிழமையன்று கைது செய்தார்கள் .பின்னர் அவர் மீது  போக்ஸோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது .

“பணத்தை அனுப்புங்க , பலான படத்தை அனுப்பறேன் -ஒரு இன்ஜினீயரின் இழிவான செயல்.