kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


'கவினை எனக்கு ரொம்ப பிடிக்கும் ': ஹவுஸ் மேட்ஸ் முன்பு காதலை வெளிப்படுத்திய லாஸ்லியா

கவின்- லாஸ்லியா
கவின்- லாஸ்லியா
Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை அந்த விட்டில் சுற்றிவரும் ஒரு விஷயம் காதல். முதலில் கவின், லாஸ்லியா, சாக்ஷியின் முக்கோண காதல் கதை ஒளிபரப்பானது. அது சற்று போர் அடித்துவிட்டதால் அதிலிருந்து சாக்ஷியை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். சாக்ஷி சென்ற பிறகு கவின்- லாஸ்லியா மிக நெருக்கமாகவுள்ளனர். ஆனால் அது எல்லாம் காதல் இல்லையாம் பாஸ் வெறும் நட்பு தானம்... 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கார்டன் ஏரியாவில் ஒரு டாஸ்க் நடைபெறுகிறது போல் தெரிகிறது. அப்போது கவினை பற்றி அப்பா(சேரன்) - மகள்( லாஸ்லியா) இருவரும் மாறி மாறி புகழ்வது போல் உள்ளது. 

லாஸ்லியா கூறுகையில், 'முதலில் எனக்கு கவினை பிடிக்கும். இப்போது ரொம்ப பிடிக்கும். அது அவனுக்கே தெரியும். தான் வெளியே சென்றாலும் பரவாயில்லை, பக்கத்தில் இருப்பவன் உயரவேண்டும் என்று நினைக்கும் குணம் யாருக்கும் வரும் என்று தெரியவில்லை' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். அவரின் பேச்சை கேட்ட கவின் வெட்கம் தாங்க முடியாமல் அசடு வழிவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.