• April
    09
    Thursday

Main Area

Main



அண்ணி கவின் அண்ணா எங்கே? லாஸ்லியா வெளியிட்ட போட்டோவுக்கு கவின் ஆர்மியினரின் தெறிக்கவிடும் கமெண்ட்ஸ்!

லாஸ்லியா
லாஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார்.

ttn

இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது. இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். மறக்காமல்  தனது புகைப்படங்களையும் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் லாஸ்லியா தனது  டிவிட்டர்  பக்கத்தில் தனது  லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பதிவிட அதை கண்ட கவின் ஆர்மியினர்  சூப்பரா இருக்கீங்க அண்ணி என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 

2018 TopTamilNews. All rights reserved.