வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் விலக்கு கோரி, லாரி உரிமையாளர்கள் மனு

 

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் விலக்கு கோரி, லாரி உரிமையாளர்கள் மனு

தேனி

லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து தளர்வு அளிக்கக் கோரி, தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகன உரிமையாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தேனி மாவட்டத்தில், தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய 3 வட்டார லாரி உரிமையாளர் சங்கங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருவதாகவும், கொரோனா காலத்தில் லாரிகளுக்கு லோடு இல்லாத சூழ்நிலையிலும், காப்பீடு உள்ளிட்டவைகளை முறையாக கட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் விலக்கு கோரி, லாரி உரிமையாளர்கள் மனு

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கனரக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தவும், ஒளிரும் பட்டை ஓட்டுவதில் இருந்தும், தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டனர். அதேபோல், வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களின் மட்டும் வாங்க வேண்டுமென கட்டாயப்பட்டுதக் கூடாது என்றும் அவர்கள் கேட்டுககொண்டனர்.