சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி… ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டிலை அள்ளிச் சென்ற மக்கள்!

 

சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி… ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டிலை அள்ளிச் சென்ற மக்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் மது ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. வண்டியில் வந்தவரைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சாலையில் கொட்டிக்கிடந்த பெட்டிகளை உடைத்து மக்கள் பாட்டில்களை எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி… ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டிலை அள்ளிச் சென்ற மக்கள்!திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியில் உள்ள அரசு மதுபானக் கிடங்கிலிருந்து மதுபானங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று டாஸ்மாக் கடைகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி அருகே லாரி வந்த போது டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது.
இதில் மது பாட்டல்கள் அடங்கிய பெட்டிகள் சாலையில் விழுந்து நொருங்கியது. பல பெட்டிகள் பாதுகாப்பாக இருந்தது. தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் மதுபான பிரியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மது பாட்டில்களை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி… ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டிலை அள்ளிச் சென்ற மக்கள்!லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்தவர் காயத்தோடு தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சினர். ஆனால் மது பாட்டில்களை எடுக்கும் அவசரத்தில் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் இருப்பது தெரிந்தும், அவர்கள் வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் பலரும் முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்து பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அதிக அளவில் கூட்டம் கூடியதால் போலீசாரால் வீடியோ எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.