எஸ்.ஐ தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்த லாரி டிரைவர்! – நீலகிரியில் அதிர்ச்சி

 

எஸ்.ஐ தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்த லாரி டிரைவர்! – நீலகிரியில் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் லாரி டிரைவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (52). லாரி ஓட்டுநரான இவர், நந்தட்டி பகுதி வழியாக கூடலூர் நோக்கி லாரியில் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது லாரி மோதியது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தியாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எஸ்.ஐ தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்த லாரி டிரைவர்! – நீலகிரியில் அதிர்ச்சிதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் லாரி டிரைவர் தியாகராஜனை அவதூறாக பேசி, ஆவணங்களை எடுத்து வரும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன், லாரிக்கு சென்று லாரியில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீவைத்துக்கொண்டார். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து அவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு 45 சதவிகித அளவுக்கு தீக்காயம் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.ஐ தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்த லாரி டிரைவர்! – நீலகிரியில் அதிர்ச்சிஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தியாகராஜனிடம் ஆர்.டி.ஓ ராஜ்குமார் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதில், எஸ்ஐ மணிதுரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்து தீவைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் தரப்பில், “தியாகராஜன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறை விலக்கிய எஸ்.ஐ ஆவணங்களை எடுத்துவரக் கூறியுள்ளார். ஆவணங்கள் எடுத்து வருவதற்கு பதில் தியாகராஜன் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார்” என்று கூறுகின்றனர்.