ஈரோட்டில் இன்று காலை விபத்து நூல் பாரம் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி மளிகைக்கடைக்கு புகுந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் இன்று காலை விபத்து நூல் பாரம் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி மளிகைக்கடைக்கு புகுந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நேற்றிரவு நூல் கோன் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் மில்லுக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது லாரியை பாலாஜி வயது 45 என்பவர் ஓட்டி வந்தார் இன்று காலை அந்த லாரி நாடார்மேடு பகுதி வந்து கொண்டிருந்தது அப்போது ஒரு பெண் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார் அந்தப் பெண் மீது லாரி மோதல் இருக்க டிரைவர் பாலாஜி லாரியை திருப்பினார் அப்போது லாரி

ஈரோட்டில் இன்று காலை விபத்து நூல் பாரம் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி மளிகைக்கடைக்கு புகுந்ததால் பரபரப்பு

கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் மீது மோதி அதனருகே இருந்த மளிகைக் கடையின் முன் பகுதியில் நுழைந்தது இதனால் மளிகை கடைக்கு பொருள் வாங்க வந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் மின் கம்பம் உடைந்து லாரி மீது விழுந்தது இதில் யாருக்கும் எந்த விதகாயம் ஏற்படவில்லை இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது

ஈரோட்டில் இன்று காலை விபத்து நூல் பாரம் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி மளிகைக்கடைக்கு புகுந்ததால் பரபரப்பு

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்