தீபாவளிக்கு டிவி வாங்கப் போறீங்களா? – இதப்படிங்க முதல்ல!

 

தீபாவளிக்கு டிவி வாங்கப் போறீங்களா? – இதப்படிங்க முதல்ல!

சோனி நிறுவனம் ஏ8எச் ஒஎல்இடி என்ற 65 இன்ச் அளவு கொண்ட பிரமாண்ட ஒஎல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆண்டிராய்ட் 9 வெர்சனில் இயங்கும் இந்த டிவி, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகியவற்றின் சப்போர்ட் உண்டு. அல்ட்ரா எச்டி எனப்படும் 4கே ரெசல்யூசன், 16 ஜிபி மெமரி, பில்ட் இன் குரோம்கேஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட், கூகுள் பிளே ஸ்டோர் என சகலமும் கொண்டிருக்கும் இந்த டிவியில் தங்களுக்கு பிடித்த செயலிகளை நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிகிறது.

தீபாவளிக்கு டிவி வாங்கப் போறீங்களா? – இதப்படிங்க முதல்ல!

சோனி நிறுவனம், எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசசருடன் டிரிலூமினஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதால், திரையில் உள்ள காட்சி அதிதுல்லியமாகவும், கண்ணை கவரும் வகையில் வண்ணமயமாகவும் தெரியும் என தெரிகிறது.

மேலும் பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ள இந்த 65 இன்ச் ஒஎல்இடி டிவி, சோனியின் அனைத்து ஷோரூம்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்கள் மட்டுமின்றி அமேசான் ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஜஸ்ட் 2 லட்சத்து 79 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்