“போலி வெப்சைட்டுகளில் காலியாகும் பர்ஸுகள்” -வேலை கேட்டவரிடம் ,ஆன்லைனில் பணத்தை ஆட்டைய போட்ட கூட்டம் ..

 

“போலி வெப்சைட்டுகளில் காலியாகும் பர்ஸுகள்” -வேலை கேட்டவரிடம் ,ஆன்லைனில் பணத்தை ஆட்டைய போட்ட கூட்டம் ..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மன்யாட்டா டெக் பார்க்கில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் சந்திரன் என்ற பொறியாளர் ,தங்களின் கம்பெனியில் ஆள் குறைப்பு நடப்பதால் வேறு வேலை தேட முடிவு செய்தார் ,இதனால் வேலை தரும் வெப்சைட்டுகளான ‘கிகளோ சர்வீஸில்’ வேறு வேலை தேடி மனு செய்தார் .

“போலி வெப்சைட்டுகளில் காலியாகும் பர்ஸுகள்” -வேலை கேட்டவரிடம் ,ஆன்லைனில் பணத்தை ஆட்டைய போட்ட கூட்டம் ..அப்போது ஒரு கம்பெனியிலிருந்து ஒருவர் சந்திரனை தொடர்பு கொண்டு ,தான் ஒரு ஐடி கம்பெனியின் அதிகாரி என்றும் ,உங்களுக்கு வேலை தர நீங்கள் பதிவு கட்டணமாக 50000 ரூபாய் கட்டவேண்டும் என்றனர் .இதை உண்மையென நம்பிய சந்திரன் உடனே அந்த பணத்தை அவர்கள் சொன்ன அக்கௌண்டுக்கு அனுப்பினார் .பிறகு சில நாள் கழித்து ,அதே கம்பெனியிலிருந்து வேறு அதிகாரி பேசுகிறேனென்று ஒருவர் பேசி மேலும் பணத்தை சந்திரனிடம் கேட்டார் ….இப்படியாக சந்திரன் 85000 ரூபாய்க்கு மேல் அவர்கள் கேக்கும்போதெல்லாம் அனுப்பியதில் அவரின் அக்கௌன்ட்டிலிருந்த பணம்தான் காலியானது ,வேலை கொடுத்த பாடில்லை .பிறகு சில நாள் கழித்து அவர்களை தொடர்பு கொண்டபோது அந்த போன் வேலை செய்யவில்லை .

“போலி வெப்சைட்டுகளில் காலியாகும் பர்ஸுகள்” -வேலை கேட்டவரிடம் ,ஆன்லைனில் பணத்தை ஆட்டைய போட்ட கூட்டம் ..இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன் சைபர் கிரைம் போலீசில் அவர்கள் மீது புகாரளித்தார் .அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .இந்த மோசடி பற்றி சைபர் கிரைம் அதிகாரி கூறும்போது ,இது போல பல மோசடி வெப்சைட்டுகள் இளைஞர்களை ஏமாற்றி வருவதாகவும் ,அவைகளிடம் பணத்தை இழக்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமெனவும் கூறினார் .