வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்பவர்களின் உயிருக்கே ஆபத்து!

 

வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்பவர்களின் உயிருக்கே ஆபத்து!

வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இத்தகைய அதிர்ச்சி முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதிக நேரம் வேலை செய்வதால் ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலைப் பளு இன்னும் அதிகரித்திருப்பதால் வருங்காலங்களில் பெரும் அபாயம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்பவர்களின் உயிருக்கே ஆபத்து!

அதிக வேலைப் பளு காரணமாக 2016ஆம் ஆண்டு மட்டும் 7 லட்சத்து 45 ஆயிரம் மக்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. இது 2000ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். உலக சுகாதார அமைப்பும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 72 சதவீதத்தினர் ஆண்கள் எனவும், அவர்களில் நடுத்தர வயது (30-45) கொண்டவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்பவர்களின் உயிருக்கே ஆபத்து!

ஒரு வாரத்தில் 55 மணி நேரமோ அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரமோ வேலை செய்பவர்களுக்கு 35 சதவீதம் பக்கவாதம் ஏற்படவும் 17 சதவீதம் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறி அதிர்ச்சியடைய வைக்கிறது. இதுவே வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது 2000-2016 இடைப்பட்ட ஆண்டுகளை மையமாக வைத்து நடத்தப்பட்டது எனவும், கொரோனா காலத்தால் ரிஸ்க் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.