மணிக்கணக்கில் டி.வி பார்ப்பவர்களுக்கு கழுத்து வலி வரலாம்!

கழுத்து வலி… வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் இந்தப் பிரச்சினை இன்றைக்கு இளம் வயதினரையும் பாதிப்பது வேதனை. கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவது கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம். அதிக சுமையை தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் கழுத்து வலி வரலாம்.

செல்போனில் பேசியபடி…
கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும் இன்றைய இளைஞர்களில் பலர் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர். இவர்களில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்வது வழக்கமாகிவிட்டது. காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்திருப்பதாலும், மணிக்கணக்கில் செல்போன் பயன்படுத்துவதாலும் கழுத்து வலி வரலாம்.

பல மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே டி.வி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, உயரமான தலையணைகளை வைத்துக்கொண்டு தூங்குவது, தொடர் பயணங்களின்போது உட்கார்ந்துகொண்டே தூங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு வழிவகுக்கும். இளைஞர்களில் பலர் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். அவர்கள் ஒரு பக்கமாக கழுத்தை வைத்துக்கொண்டு செல்போனில் பேசியபடி செல்வதால் கழுத்து வலி வர வாய்ப்பு உள்ளது. குண்டும் குழியுமான சாலைகளில் அடிக்கடி பயணிப்பதாலும் பாதிக்கலாம்.

மாரடைப்பு…
இவை அல்லாமல் கழுத்தில் அடிபடுவது, விளையாடும்போது கழுத்தெலும்பு ஜவ்வு விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்து வலி வரலாம். மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலியுடன் கழுத்து வலியும் வரலாம். அதற்காக கழுத்து வலி வந்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. கழுத்தில் வலி வரும்போது இடப்பக்கமும், வலப்பக்கமுமாக அசைத்துப் பார்ப்பது நல்லது. சாதாரண வலியாக இருந்தால் இறுக்கம் குறைந்து வலி குறையும்.

கழுத்து வலியின் தொடக்க நிலையில் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்தி விடலாம். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வலி நீடித்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும், நிற்கவும், நடக்கவும் பழகுவது நல்லது. அதேபோல் பேருந்துப் பயணங்களின்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பஸ், ரெயில் பயணங்களின்போது உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாத பட்சத்தில் தலையை பின்பக்கமாக சாய்ந்து உறங்குங்கள்.

மிருதுவான தலையணை…
தொலைக்காட்சி பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பார்ப்பதைத் தவிருங்கள். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கணினி திரை கண் பார்வைக்கு நேர் மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையை தூக்கிக்கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், தொடர்ந்து கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டிருக்காமல் இடையிடையே எழுந்து நடக்க வேண்டும் அல்லது ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கழுத்தை ஒரேநிலையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் தலையை குனிந்தபடி நீண்ட நேரம் வேலை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். உதாரணமாக தையல் தொழிலாளர்கள் தலையைக் குனிந்து பார்த்தே தைக்க வேண்டியிருப்பதால் அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறங்கும்போது மிருதுவான தலையணை பயன்படுத்துவது நல்லது. அளவுக்கு அதிகமான சுமையை தூக்காதீர்கள்.

சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, வாக்கிங் போவது, தோப்புக்கரணம் போடுவது, எட்டு வடிவ நடை மேற்கொள்வது என தினமும் ஒன்றையாவது செய்தால் கழுத்து வலியிலிருந்து மீளலாம். அதேபோல் கழுத்து தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். யோகாசனப் பயிற்சிகள் செய்வதும் கைகொடுக்கும். எலும்புக்கு வலு சேர்க்கும் உணவுகளை உட்கொள்வதும் கூடுதல் பலன் தரும்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...