பிங்க் நிறத்துக்கு மாறிய விண்கல் ஏரி… மகாராஷ்டிராவில் பரபரப்பு

 

பிங்க் நிறத்துக்கு மாறிய விண்கல் ஏரி… மகாராஷ்டிராவில் பரபரப்பு

மகாராஷ்டிராவில் எரிகல் விழுந்ததால் உருவான ஏரியில் எப்போதும் பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரின் நிறம் திடீரென்று பிங்க் நிறமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏன் இப்படி நிறம் மாறியது என்று தெரியாமல் விஞ்ஞானிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

பிங்க் நிறத்துக்கு மாறிய விண்கல் ஏரி… மகாராஷ்டிராவில் பரபரப்புமகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் லோனார் ஏரி என்ற ஏரி உள்ளது. இது 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் காரணமாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த ஏரியின் தண்ணீர் எப்போதும் பச்சை நிறத்தில் காணப்படும். சில தினங்களாக இந்த ஏரியின் தண்ணீர் பிங்க் நிறத்தில் இருப்பதால் பொது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். பலரும் வந்து பிங்க் நிறத்தில் இருக்கும் ஏரியைப் பார்த்து செல்கின்றனர்.
இந்த ஏரி குறித்து புல்தானா மாவட்ட கலெக்டர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “உலக அதிசயமான லோனா ஏரி தற்போது பிங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. நுண்ணுயிரியல் நிபுணர்கள் இதற்கு காரணத்தை தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
புவியியல் நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், “லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்கு முன்பும் பல முறை மாறியுள்ளது. ஆனால் முழுமையாக பிங்க் நிறத்துக்கு மாறியது இதுவே முதன்முறை. இது உப்புநீர் ஏரியாகும். இந்த நீரில் பி.ஹெச் அளவு 10.5 என்ற அளவில் இருக்கும். இந்த நீரில் இருக்கும் பாசிகள் மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.
நீரின் உப்புத் தன்மை அதிகரிக்கும்போது எல்லாம் பிங்க் நிறத்துக்கு அது மாறும். கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் நீரின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது.இதனால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து பாசிகள் இறந்திருக்கலாம். இதன் காரணமாக ஏரியின் நிறம் பிங்க் நிறத்துக்கு மாறியிருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. இது நீரில் நடக்கும் வழக்கமான மாற்றம்தான். இன்னும் சில வாரங்களில் மேலும் மாற்றங்கள் தென்படும் என்று கருதுகிறோம்” என்றனர்.