கன்னியாகுமரி மாவட்ட லோக் அதாலத்தில், ரூ.3.47 கோடிக்கு தீர்வு!

 

கன்னியாகுமரி மாவட்ட லோக் அதாலத்தில், ரூ.3.47 கோடிக்கு தீர்வு!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாவட்ட பொறுப்பு முதன்மை நீதிபதி எழில்வேலன் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல், காசோலை மோசடி, வாகன விபத்து தொடர்பான ஆயிரத்து 669 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட லோக் அதாலத்தில், ரூ.3.47 கோடிக்கு தீர்வு!

இதில் விசாரணையின் போது, சுமார் 141 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகளுக்கு 3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 729 ரூபாய் இழப்பீட்டு தொகை பெற்றுத்தரப் பட்டது. எஞ்சிய வழக்குகளில் நீதிமன்ற விசாரணை மூலம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த லோக் அதாலத்தில், மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் நம்பிராஜன், சிறப்பு நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று வழக்குகளில் விசாரணை மேற்கொண்டனர்.