எனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

 

எனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து எடுத்த கைதி படமும் வெற்றிபெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 64’ ஆன மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா பரவலால் தள்ளி போகி கொண்டே உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.