• December
    05
    Thursday

Main Area

Main



சூப்பர் ஸ்டாரை சந்தித்த தளபதி 64 இயக்குநர்! 

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

கைதி படத்தைத் தொடர்ந்து தளபதி 64 படத்தை இயக்கிவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். 

தீபாவளியை முன்னிட்டு வெளியான லோகேஷ் கனகராஜின் கைதி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் வேட்டையாடிய கைதிப் படத்தை பார்த்த ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

Lokesh Kanagaraj

முன்னதாக விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டிய ரஜினி, தற்போது அவருடனே தலைவர் 186 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனராஜை ரஜினி சந்தித்தித்திருப்பதால் அடுத்தப்படம் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.  
 

2018 TopTamilNews. All rights reserved.