மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா!

 

மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா!

நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 2வது நாளாக தர்ணா போரட்டம் செய்து வருகின்றனர்.

விவசாய மசோதாவுக்கு எதிராக அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் கடந்த செப்.20 ஆம் தேதி அமளியில் ஈடுப்பட்டனர். அவைத் துணைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்தெறிந்தனர்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா!

இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் புகார் தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதை எதிர்த்து எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா!

இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு நேரத்திலும் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள் தேச பக்தி பாடல்கள் , விவசாயிகளுக்கு ஆதரவு பாடலையும் பாடினர். நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற மறுத்த எம்பிக்கள் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.