சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதையை சொல்லி எம்.பி.க்களை சிரிப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி..

 

சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதையை சொல்லி எம்.பி.க்களை சிரிப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி..

சில மாற்றங்கள் செய்யாவிட்டால் சில மறைக்கப்பட்ட சட்டங்கள் நிலவும் என்பதை இங்கிலாந்தின் மு்ன்னாள் பிரதமர் சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதையை சொல்லி பிரதமர் மோடி, எம்.பி.க்களை சிரிப்பில் ஆழ்த்தியதோடு, சிந்திக்கவும் வைத்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்கையில் கூறியதாவது: ஒருவர் என்னிடம் சொன்தை சொல்கிறேன். 1960களில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அதிகாரிக்கு ஒரு ரகசியம் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், அதனை எழுதிய நபர் பல ஆண்டுகளாக நான் சிஸ்டத்தில் நேர்மையாக வேலை பார்த்து வருகிறேன் ஆனால் சம்பளம் ஒரு போதும் உயர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர் கடிதம் எழுதிய நபருக்கு அவரது பெயர் மற்றும் நிலவரம் குறித்து விசாரித்து பதில் கடிதம் எழுதினார். இதனையடுத்து அந்த நபர் மாநில அரசின் தலைமை செயலாளர் அலுவலகத்தில் சி.சி.ஏ. பதவியில் பணிபுரிவதாக பதில் கடிதம் எழுதினார்.

சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதையை சொல்லி எம்.பி.க்களை சிரிப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி..
சர்ச்சில்

சி.சி.ஏ. பதவி குறித்து கேள்விபடாத அந்த ஆணையத்தின் தலைவர் அது தொடர்பாக மேலும் சில விவரங்களை அந்த நபரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர், தான் கட்டுப்பட்டவர் என்றும் அதனை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்றும், ஆனால் 1975ம் ஆண்டுக்கு பிறகு என்னால் அது குறித்த விவரங்களை சொல்ல முடியும் என்று பதில் அளித்தார். இதனையடுத்து ஆணையத்தின் தலைவர், 1975ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு ஆணையத்தின் முன்னாலும் நீங்கள் ஆஜராகி உங்களது கஷ்டங்களை தெரிவிக்கலாம் என்று மீண்டும் கடிதம் எழுதினார். இதனையடுத்து தனது நிலையை விளக்கமா சொல்லவில்லை என்றால் நிவாரணம் கிடைக்காது என்பதை உணர்ந்த அந்த கடிதம் எழுதிய நபர், சி.சி.ஏ. பதவி என்பது சர்ச்சிலின் சிகார் (சுருட்டு) உதவியாளர் என்று அந்த ஆணையருக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதினார்.

சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதையை சொல்லி எம்.பி.க்களை சிரிப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி..
சுருட்டு

சிறந்த திருச்சினோபொலி சுருட்டுக்களை வாங்கி அவற்றை 10 டவுனிங் தெருவுக்கு அனுப்ப வேண்டியது சர்ச்சிலின் சிகார் உதவியாளர் பணியாகும். 1945 தேர்தலில் சர்ச்சில் தோல்விஅடைந்த பிறகும் அவருக்கு சி.சி.ஏ. தொடர்ந்து சுருட்டு அனுப்பி வந்தார். சரி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இது முடிவடையும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் அது தொடர்ந்தது, அந்த பதவியும் நீடித்தது. ஆக, சில மாற்றங்கள் செய்யாவிட்டால் இந்த மறைமுகமான சட்டங்கள் நிலவும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி, சர்ச்சிலின் சிகரெட் உதவியாளர் கதையை சொல்லி முடித்ததும் எம்.பி.க்கள் அனைவரும் சிரிப்பில் மிதந்தனர்.