• March
    28
    Saturday

Main Area

Main



இந்த விஷயத்தில் சாதித்த காங்கிரஸ்! சறுக்கிய பாஜக!!

Congress
Congress

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகளவு வாக்குகளை பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. 

17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும் டெல்லியில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கே அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  

3 தொகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கிழக்கு டெல்லியின் சிறுபான்மையினரின் ஆதிக்கம் அதிகம் உள்ள ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அரவிந்தர் சிங், 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். ஆனால் அத்தொகுதியில் உள்ள பாஜக இதைவிட குறைவான வாக்குகளே பெற்றுள்ளன. 
 

2018 TopTamilNews. All rights reserved.